shadow

ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

gv-prakashஎம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி திருநாளில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் அடுத்தபடத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘4G’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அருண்பிரசாத் இயக்கவுள்ள இந்த படம் ஃபேண்டஸி ரொமான்ஸ் படமாக அமையவுள்ளதாகவும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply