சூர்யாவின் அடுத்த படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர்

பிரபல நடிகர் சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டெக்னீஷியன் தேர்வு குறித்து இயக்குனர் சுதா தீவிர முயற்சியில் இருப்பதாகவும் முதல்கட்டமாக இந்த புதிய படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷை அணுகி அவரிடம் சம்மதம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதற்கு முன்னர் சூர்யாவின் படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்காத நிலையில் முதன்முதலாக அவர் சூர்யாவுடன் இந்த படத்தின் மூலம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்தகட்டமாக இந்த படத்தின் நாயகியை தேடும் படலத்தில் சுதா இறங்கியுள்ளதாகவும் இதுகுறித்து முன்னணி நடிகைகள் இருவரிடம் பேச்சுவார்த்த நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *