shadow

தியேட்டர் கிடைப்பதில் சிக்கல். பொங்கல் போட்டியில் இருந்து விலகியது புரூஸ்லீ

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென பின்வாங்கியுள்ளது. இதற்கு காரணம் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது

திரையரங்கு உரிமையாளர்கள் விஜய்யின் ‘பைரவா’, விஜய்சேதுபதியின் ‘புரியாத புதிர்’ ஆகிய படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ‘புரூஸ்லீ’ படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றும் அதனால் இந்த படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காத வகையில் ‘பைரவா’ படத்துடன் ஜி.வி.,பி நடித்த ‘அடங்காதே’ டீசர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply