shadow

அஜித்தின் ‘அமர்க்களம்’ படத்தின் ரீமேக்கா ‘அடங்காதே’?

gvp1அஜித், ஷாலினி நடிப்பில் சரண் இயக்கிய திரைப்படம் ‘அமர்க்களம்’ இந்த படம் நல்ல வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்-ஷாலினி காதல் மலர்ந்தது.

இந்நிலையில் இந்த படம் தற்போது சத்தமில்லாமல் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அந்த படம் தான் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள ‘அடங்காதே’ படம் என்றும் கூறப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ், சுரபி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

Leave a Reply