புலிட்சர் விருதுகள் அறிவிப்பு; விருது பெற்றவர்கள் யார் யார்?

ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகிறது.

மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்கெர், பிரெஸ் டெமோக்ரட், அரிசோனா ரிபப்ளிக், யு.எஸ்.ஏ டுடே, தி சின்சின்னாட்டி என்கொயர், ராய்டர்ஸ், அலபாமா, நியூயார்க் மேகசின், தி டெஸ் மோனிஸ் ரெஜிஸ்டெர் ஆகியவை பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.

ராய்சேல் காட்ஸி கான்ஷா, ஜான் ஹெல்பெர்ன், மிச்சேல் ஸ்லோன் ஆகிய ஊடகவியலாளர்களும் விருதுகளை வென்றுள்ளனர். ஆண்ட்டூ சீன் கீர் என்பவர் எழுதிய லெஸ் என்ற புத்தகம் பிக்சன் பிரிவுக்கான விருதை வென்றுள்ளது. வரலாற்று பிரிவில் விருதை ஜாக் டேவிஸ் எழுதிய தி கல்ப்: மேக்கிங் ஆப் அன் அமெரிக்கன் சீ என்ற புத்தகமும், வாழ்க்கை வரலாறு பிரிவில் கரோலின் ப்ராசெர் எழுதிய ப்ராய்ரி பயர்: தி அமெரிக்கன் ட்ரீம்ஸ் ஆப் லாவ்ரா என்ற புத்தகமும், கவிதை பிரிவில் ப்ராங் பிதார்ட் எழுதிய ஹால்ப் லைட் என்ற புத்தகமும் விருதுகளை வென்றுள்ளன.

மார்டைனா மஜோக் என்பவர் இயற்றிய காஸ்ட் ஆப் லிவிங் என்ற நாடகமும், கெண்ட்ரிக் லாமர் இயற்றிய டாம்ன் என்ற ஆல்பம் சிறந்த பாடல் விருதை வென்றுள்ளது.

Leave a Reply