shadow

download (1)

நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, அதன் சீரான இயக்கத்தைத் தடுக்கிறது.

எனவே வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

நொறுக்குத்தீனிகளை சாப்பிடும் நேரங்களில் பழங்களை சாப்பிட்டால், மிகவும் எளிமையாக வயிற்றை மட்டுமின்றி, உடலின் அனைத்து உறுப்புக்களையும் சுத்தப்படுத்தலாம்.

தர்பூசணி

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் மற்றும் செரிமான பாதையில் தங்கியுள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும். எனவே வாரம் இரண்டு முறையாவது தவறாமல் இதனை உட்கொண்டு வாருங்கள்.

ஆப்பிள்

சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆப்பிள் கூட செரிமான பாதைகளை சுத்தம் செய்ய உதவும். ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்ற டாக்ஸின்களின் சேர்க்கையை தடுக்கும் மற்றும் குடலை சுத்தம் செய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது.

அவகேடோ

அவகேடோ சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. அதில் ஒன்று தான் குளுடாதயோன். இந்த சத்து கல்லீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் கெமிக்கல்களை வெளியேற்றி, செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றிவிடும். அதிலும் வாரத்திற்கு 2 முறை ஒரு கையளவு கிரான்பெர்ரி சாப்பிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பப்பளிமாஸ்

பப்பளிமாஸ் பழத்தில் பெக்டின் அதிகம் உள்ளது. இவை வயிற்றை சுத்தம் செய்வதோடு, உடலை ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். இந்த பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு கூட எடுத்து வரலாம்.

Leave a Reply