shadow

நாளை முதல் ஜனவரி 20 வரை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜன.20 வரை விடுமுறை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் தற்போது தமிழகத்திலும் வெடித்துள்ளது

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜன.20 வரை விடுமுறை என பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது

முன்னதாக டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடி, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *