shadow

தமிழகத்தை அடுத்து ஆந்திராவிலும் ஹெல்மெட் கட்டாயம். நாளை முதல் அமல்

23TH_HELMET_2448345fஜூலை 1ஆம் தேதி முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், அந்த வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய சட்டத்தால் ஹெல்மெட் விற்பனை தமிழகம் முழுவதும் அமோகமாக இருந்தது. அதுமட்டுமின்றி பல இடங்களில் ஹெல்மெட் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டதாக புகார்களும் எழுந்தன. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் போடப்பட்டும் வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமலான இந்த விதி நாளை முதல் ஆந்திர பிரதேச மாநிலத்திலும் அமலாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலாளர் கிருஷ்ணாராவ் தலைமையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சாலை பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும், சுப்ரீம் கோர்ட்டினால் வகுக்கப்பட்டுள்ள சில நெறிமுறைகளையும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்பின்ன்னர் கூட்டத்தின் இறுதியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர் கிருஷ்ணா ராவ், புதிய விதிமுறையை கண்காணிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

நாளை முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம்  ஆந்திராவில் நடைமுறைக்கு வரவுள்ளதால், ஆந்திர மாநிலம் முழுவதும் ஹெல்மெட் விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும், ஹெல்மெட் விற்கும் கடைகளில் கூட்டம் அதிகம் காணப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply