உலகக்கோப்பை கால்பந்து இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் ரஷ்யா-சவுதி அரேபியா மோதல்

உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த உலககோப்பை கால்பந்து போட்டி இன்றுமுதல் தொடங்குகிறது. இன்று மாலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சியும் அதன் பின்னர் முதல் போட்டியும் நடைபெறவுள்ளது.

இன்றைய முதல் போட்டியில் ரஷ்யா அணி, சவுதி அரேபியா அணியுடன் மோதுகிறது. போட்டியை நடத்தும் ரஷ்யா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர்,.

உலக கோப்பை போட்டியை நடத்த ரஷ்யா சுமார் ரூ.88 ஆயிரம் கோடிகளை செலவு செய்துள்ளது. இதுவரை போட்டிகளை காண சுமார் 24 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்ச டிக்கெட்டின் விலை ரூ 6710 என்பதும், அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ.70502 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளை காண வரும் வெளிநாட்டினர்களுக்கு விசா தேவையில்லை என்றும், போட்டி டிக்கெட்டுக்களை வைத்திருந்தால் போதுமானது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *