shadow

இன்று முதல் தினசரி பெட்ரோல், டீசல் விலை

இந்தியாவில் இதுவரை 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் தங்கம், வெள்ளி போல தினமும் காலை 6 மணிக்கு அன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

இன்றைய முதல் நாளில் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய விலை பெட்ரோல் லிட்டருக்கு 1.12 ரூபாயும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 1.24 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.02க்கும், டீசல் 57.41க்கும் விற்பனை செய்யப்படும்.
இந்த விலை நாளை காலை 6 மணி வரை மட்டுமே செல்லுபடியாகத்தக்கது. இதேபோல் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு அன்றைய தினத்தின் விலை அறிவிக்கப்படும். அடுத்த நாள் காலை 6 மணி வரை அமலில் இருக்கும். ஒவ்வொரு நாளும் 6 மணிக்கு அறிவிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோல் பங்க்குகளிலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் fuel@IOC என்ற மொபைல் ஆப் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply