shadow

இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல். மூடப்படும் கடைகளின் விபரங்கள்

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் முதல்வராக பொறுப்பேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த உத்தரவின்படி இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மண்டல வாரியாக பின்வருமாறு:

சென்னை -105 டாஸ்மாக் கடைகள்-63 பார்கள்

கோவை- 44 டாஸ்மாக் கடைகள்-20 பார்கள்

மதுரை- 90 டாஸ்மாக் கடைகள்-37 பார்கள்

சேலம்-133 டாஸ்மாக் கடைகள்-26 பார்கள்

திருச்சி-119 டாஸ்மாக் கடைகள்-23 பார்கள்

மூடப்பட உள்ள இந்த 500 டாஸ்மாக் கடைகளில் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு,மாற்றுப் பணி வழங்கப்படும் எனவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அ

Leave a Reply