shadow

6 copyஇந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திரமோடி இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்க உள்ளார்.இந்த விழாவில் உலகத்தலைவர்கள் உள்பட ஏராளமான வி.ஐ.பிக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

1950 ஆம் ஆண்டு குஜாரத்தில் உள்ள வாட்நகர் பகுதியில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார் மோடி. ஹீராபென் மற்றும் தாமோதர் தாஸ் மல்சந்த் மோடி ஆகியோர்களே மோடியின் தாய் மற்றும் தகப்பனார் ஆவார். இவருடைய பெற்றோருக்கு மோடி மூன்றாவது மகனாக பிறந்தார்.

7aகுஜராத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த மோடி சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உறுப்பினராகி தீவிர சேவை செய்தவர். இவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்தபோது இவருக்கு வயது எட்டு என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் இவர் தந்தை நடத்தி வந்த டீக்கடையில் தந்தைக்கு உதவியாக டீ விற்பவராக தனது வாழ்க்கையை தொடங்கினார் மோடி.

josodaben.jpgமோடிக்கு 13 வயதாக இருக்கும்போது யசோதாபெண் என்ற பெண்ணை அவருக்கு நிச்சயம் செய்தனர் அவருடைய பெற்றோர். ஆனாலும் மோடிக்கு 18 வயதான பின்பே திருமணம் நடந்தது. மிகக்குறுகிய காலம் மட்டுமே மனைவியுடன் வாழ்ந்த மோடி பின்னர் மனைவியை பிரிந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார்.

election-results-2014-prime-minister-1971ஆம் ஆண்டில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவராக மாறினார் மோடி. 1975ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி எமர்ஜென்ஸியை கொண்டு வந்தபோது அதற்குஎதிராக போராடி சிறை சென்றவர் மோடி.

பின்னர் படிப்படியாக அரசியலில் உயர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். கடந்த 2001ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் அந்த மாநிலமே உருக்குலைந்தது. இதனால் அரசு நிர்வாகம் முடங்கியது. அன்றையை முதல்வர் கேஷுபாய் பட்டேல் குஜராத் பூகம்ப நிவாரண பணிகளை சரிவர கவனிக்காததால் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்கினார். இதனால் பாரதிய ஜனதா தலைமை அவரை அதிரடியாக நீக்கிவிட்டு மோடியை முதல்வராக அறிவித்தது.

2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி மோடி முதல்வராக பதவியேற்றார். அவருக்கு அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

7b7கடந்த 2002ஆம் ஆண்டு  பிப்ரவரி 7ஆம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்துக்கள் பலர் முஸ்லீம் அமைப்பினர்களால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் குஜராத்தில் இருந்த முஸ்லீம்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். முதல்வரின் மறைமுக உத்தரவின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மோடியின் அரசுக்கு கடும் நெருக்கட் ஏற்பட்டது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் முதல்வரானார். இம்முறை அவர் முஸ்லீம்கள் எதிர்ப்பை கைவிட்டு குஜராத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதில் அக்கறை காட்டினார். அவருடைய சிறந்த நிர்வாகத்தால் இந்தியாவின் முன்னணி மாநிலமாகமோடி மாறியது. இதனால் 2007ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 182 தொகுதிகளில் போட்டியிட்டு 122 இடங்களை வென்று மீண்டும் முதல்வரானார்.

18-jayalalitha-modi8-600-jpg7gமூன்றாம் முறை முதல்வரான மோடி, குஜராத் மாநிலத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினார். மோடியின் நிர்வாக திறமையால் டாடா உள்பட பல தொழிலதிபர்கள் குஜராத்தில் முதலீடு செய்தனர். தொழில் வளர்ச்சி அதிகமானது. இந்நிலையில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்தார். இதனால் மோடியின் புகழ் நாடு முழுவதும் பரவியது. 2012ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றாலும், அவரது கவனம் தேசிய அரசியலுக்கு சென்றது. பிரதமர் நாற்காலியை பிடிக்க 2013ஆம் ஆண்டில் இருந்தே கவனம் செலுத்தினார். மோடிக்கு பாரதிய ஜனதா கட்சிக்குள் ஆதரவு பெருகியது. முதலில் மோடியின் பிரதமர் ஆசையை அத்வானி எதிர்த்தாலும் வேறு வழியின்றி அவரும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஒப்புக்கொண்டார்.

2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் பெருவாரியான வெற்றியை பெற்றது. 284 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. இதோ இன்று மோடியின் பிரதமர் கனவும் நிறைவேறியது. இன்று நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடியை சென்னை டுடே நியூஸ் சார்பில் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

7h

Leave a Reply