shadow

french ecoomistசர்வதேச சந்தைத் திறன் மற்றும் ஒழுங்குமுறை குறித்து ஆய்வினை மேற்கொண்ட பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் ஜீன் டிரோல், என்பவருக்கு 2014ஆம் ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

61 வயதாகும் ஜீன் டிரோல், இன்றைய பொருளாதாரக் காலக்கட்டத்தில் தொழிற்துறையை ஒழுங்குமுறைப்படுத்துதல் குறித்த இவரது ஆய்வு மிகவும் உபயோகமானது என்று நோபல் அகாடமி தனது செய்திக் குறிப்பில் பாராட்டியுள்ளது.

உலக அளவில் பெரிய நிறுவனங்களின் ஏகபோகம் காரணத்தினால் ஒழுங்குமுறைக்கு உட்படுத்த முடியாமல் போவதாகவும், இந்த நிறுவனங்களின் ஆதிக்கம் காரணமாக, சந்தைகள் சமூக ரீதியாக விரும்பத்தகாத பல விளைவுகளை சந்திக்கின்றது என்றும் அவர் தன்னுடைய ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது, அல்லது மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையில் போட்டியின் விளைவினால் புதிய நிறுவனங்கள் உள் நுழைந்து தங்களது சந்தை ஆதிக்கத்தை குறைக்கும் விளைவுகளைத் தடுக்க ஒன்றை ஒன்று வாங்கி/விழுங்கி (கார்டெல்) வரும் நடவடிக்கைகளையும், தனி நிறுவனத்தின் சந்தை ஏகபோகத்தையும் தேச/அரசுகள் எவ்வாறு கட்டுப்படுத்தி ஒழுங்குமுறை செய்ய வேண்டும் என்பது பற்றி கொள்கை முடிவுகளையும் இவரது ஆய்வுகள் எடுத்தியம்பியுள்ளன.

விலை உச்சவரம்பை நிர்ணயிதலால் நிறுவனங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்கும் இது சமூகத்திற்கு ஒரு விதத்தில் நல்லது ஆனால் அதே வேளையில் ஆட்குறைப்பு போன்ற தீமையான விளைவுகளையும் ஏற்படுத்தும். அதேபோல் கார்ப்பரேட் மெகா நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது போட்டியை திசைத் திருப்பும் முயற்சியாக அமையும்.

Leave a Reply