shadow

spyஅமெரிக்காவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கியூபா உளவாளி, சிறையில் இருந்தபடியே ஒரு குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். ராஜதந்திர கர்ப்பத்தில் பிறந்த குழந்தை என அவருடைய குழந்தையை கியூபா ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

ஜெரார்டோ ஹெர்ணாடஸ் என்னும் கியூபா உளவாளி, அமெரிக்க அரசை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கியூபாவில் உள்ள மனைவிக்கு செயற்கை கருவூட்டல் மூலம் கர்ப்பம் தரிக்க ஏற்பாடு செய்யும்படி அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அரசு உளவாளியின் விந்தணுக்களை உறைநிலையில் வைத்து பனாமா வழியாக கியூபா நாட்டிற்கு அனுப்பியது. இந்த விந்தணுக்கள் மூலம் ஜெரார்டோ மனைவி குழந்தை பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெரார்டோ, தன்னுடைய குழந்தையை பார்க்க கியூபா நாட்டிற்கு சென்றார். ஜெரார்டோ குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருந்த புகைப்படம் கியூபாவின் அரச நாளிதழான கிரான்மாவில் வெளியாகியுள்ளது.

Leave a Reply