பாகிஸ்தான் மீண்டும் உடைகிறதா? உலக அளவில் டிரெண்ட் ஆகும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

இந்தியாவிடம் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானில் இருந்து ஏற்கனவே வங்கதேசம் பிரிந்த நிலையில் தற்போது பலுசிஸ்தான் மாகாணமும் தனிநாடு கோரிக்கையை கேட்டு வருவதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள மக்கள் தாங்கள் பாகிஸ்தான் அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும், தங்களது பகுதியில் எந்த ஒரு நலத்திட்டமும் இல்லை எனவும் கூறி தங்களது மாகாணத்தை தனியாக பிரித்து பலூச்சிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் மட்டுமே பரவிக்கொண்டிருந்த இந்த கோரிக்கை தற்போது உலக அளவில் பரவி வருகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகர பேருந்துகளில் ‘பலூசிஸ்தான் விடுதலை’ வாசகங்கள் இடம்பெற்றுள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *