shadow

‘பசங்க 2’ படத்திற்கு வரும் பசங்களுக்கு சிறப்பு சலுகை
pasanga
கடந்த 2015ஆம் ஆண்டு பல வெற்றி படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்த நிலையில் வருட இறுதியில் வெளியான சூர்யாவின் ‘பசங்க 2’ அவருக்கு ஒரு ஜாக்பாட் படம் என்றே சொல்லலாம். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் மெகா படங்களுக்கு இணையாக வசூல் செய்து வருகிறது. அழுத்தமான ஸ்கிரிப்ட் இருந்தால் ஒரு படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கு ‘பசங்க 2’ ஒரு உதாரணம்.

இந்நிலையில் இந்த படத்திற்கு வரும் 10 வயது குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த சலுகை இன்று முதல்  கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசங்களுக்கு இலவசம் என்றாலும் பசங்களுடன் வரும் பெற்றோர்களுக்கு கட்டணம் உண்டு என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்த்ததைவிட இன்னும் அதிகமாக வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, அமலாபால், பிந்துமாதவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

pasanga 2

Leave a Reply