உலகக்கோப்பை கால்பந்து: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்

ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

நேற்றைய இறுதிப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரான்ஸ் அணி முதல் பாதி இறுதியில் 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து நடந்த இரண்டாம் பாதியில் 59வது நிமிடத்தில் ஒரு கோலும், 65வது நிமிடத்தில் ஒரு கோலை போட்டு பிரான்ஸ் அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் ஆட்டத்தின்  69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பரின் கவனக்குறைவால் குரேஷியாவின் மாண்ட்சுகிச் ஒரு கோல் போட்டதால் 4-2 என்ற கணக்கில் இரு அணிகளும் இருந்தன. அதன் பின்னர் பிரான்ஸ் தடுப்பாட்டத்தை கையாண்டதால் குரேஷ்யாவால் கோல் போட முடியவில்லை. இறுதியில் பிரான்ஸ் அணி ஆட்டநேர முடிவில் 4-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி ரூ.255 கோடி பரிசு வழங்கப்பட்டது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *