shadow

EAசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு வெடித்ததை அடுத்து, இன்று காலை சென்னையில் நான்கு இடங்களில் வெடிகுண்டு வைக்கபட்டிருப்பதாக மிரட்டல் தொலைபேசி வந்துள்ளதால் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஆவடி ரயில் நிலையம், ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரி என அடுத்தடுத்து நான்கு இடங்களுக்கு வெடிகுண்டு புரளி டெலிபொன்கள் வந்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஆனால் இவை அனைத்துமே புரளியாக வந்த டெலிபோன் அழைப்புகள் என சிறிது நேரத்தில் தெரிய வந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உடனே அதில் இருந்த கடை ஊழியர்களையும், பொதுமக்களையும் போலீஸார் உடனடியாக வெளியேற்றினர். வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளே புகுந்து தீவிர சோதனை செய்ததில் இது வெறும் புரளி என கண்டறியப்பட்டது. இரண்டு மணிநேரம் கடுமையான சோதனைக்கு பின்னர் மீண்டும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்று மற்ற இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது அனைத்துமே புரளி என்று தெரியவந்தது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply