shadow

நடிகர் சங்கத்தின் நான்கு கேப்டன்கள் பெயர் அறிவிப்பு

star cricketதென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகளான நாசர் தலைமையில் விஷால், கார்த்தி போன்ற இளம் நடிகர்கள் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டுவதில் உறுப்பினர்கள் அனைவரும் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த கட்டிடத்திற்கு நிதி திரட்ட வரும் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ரஜினி, கமல் உள்பட முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஓவர்கள் கொண்ட 6 போட்டிகள் நடைபெறும் என்றும் இதற்காக ஆறு அணிகள் தேர்வு செய்யப்படும் என நடிகர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் முதல்கட்டமான நான்கு அணிகளின் கேப்டன்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்,. சூர்யா, விஷால், ஆர்யா மற்றும் தனுஷ் ஆகியோர்கள் நான்கு கேப்டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு கேப்டன்களின் பெயர்களும் இந்த போட்டியில் விளையாடும் மற்ற நட்சத்திரங்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியை காண அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் நடிகர் சங்கம் எதிர்பார்த்த கலெக்ஷனைவிட அதிகம் வசூலாகும் என செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply