முன்னாள் தமாக துணைத்தலைவர் ஞானசேகரன் அதிமுகவில் இணைந்தார்

gnanaதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் ஞானசேகரன் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால் தமாகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமாகா துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வேலூர் ஞானசேகரன் நீக்கம் செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவருடன் வேலூர் மாவட்டம் தமாக தலைவர் சீனிவாச காந்தியும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தமாகவின் துணைத்தலைவராக இருந்து கொண்டு ஞானசேகரன் அதிமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியதாகவும் அதனையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமாகா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை ஞானசேகரன் இன்று காலை சென்னை போயஸ்கார்டனில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அவருக்கு ஜெயலலிதா அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார். தமாகா மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக, காங்கிரஸ் மற்றும் திமுகவில் இணைந்து வருவது தமாகாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *