shadow

 முன்னாள் இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகே மறைவு

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகே உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 83.

டிசம்பர் 21-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட விக்ரமநாயகே சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த ரத்னசிறி விக்ரமநாயகே 2000-2001 மற்றும் 2005-2010 ஆண்டுகளில் இலங்கை பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த தலைவருக்கு உலக தலைவர்களும் உள்ளூர் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply