shadow

ராஜபக்சே தம்பி பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

pasil rajapakseஇலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததை அடுத்து அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பலவிதமான நடவடிக்கைகள் புதிய அரசால் எடுத்து வரப்படும் நிலையில் தற்போது ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே கருப்புப்பணம் விவகாரம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்த போது அவரது தம்பி பசில் ராஜபக்சே மந்திரியாக இருந்து வந்தார். அந்த சமயத்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் ஆட்சி மாறிய பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்க புதிய அரசு முடிவு செய்தது.

ஏற்கனவே அவர் ஊழல் வழக்கு தொடர்ப்பாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பசில்ராஜபக்சே மீது  தற்போது கருப்பு பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் பூகோடா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பசில் ராஜபக்சேவை ஆஜர்படுத்தினார்கள். அப்போது பசில் ராஜபக்சே சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார். எனவே உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply