ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: முன்னாள் பிரதமர் கடும் தாக்கு

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த இரு தேசிய கட்சிகளளயும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தள கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது ராகுல்காந்தி குறித்து கூறியதாவது:

எங்களை பாரதிய ஜனதாவின் ‘பி’அணி என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லி வருகிறார்கள். ராகுல்காந்தியும், சித்தராமையாவும் பல குற்றச்சாட்டுக்களை எங்கள் மீது சொல்கின்றனர். அதே நேரத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக போராட எங்களை அவர்கள் அழைக்கிறார்கள்.

ராகுல்காந்தியை பொறுத்தவரையில் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார். யாராவது சொல்லிக் கொடுப்பதை கிளிப்பிள்ளை போல அவர் சொல்கிறார். அவருக்கு சரியாக வரலாறு தெரியாது. கர்நாடகாவின் நிலைமை என்ன என்பதை அவர் அறிந்திருக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *