shadow

rajapakseஇலங்கை அதிபர் பதவியை இழந்த ராஜபக்சே, தற்போது பிரதமர் பதவியை பிடிக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்கள் ராஜபக்சேவை எதிர்த்து நேருக்கு நேர் போட்டியிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் போட்டியிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கவில்லை. இதனால் முன்னாள் விடுதலைப்புலிகள் இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக நடேசப்பிள்ளை வித்யாதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை வடமாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்தி சசிதரன் என்பவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply