shadow

நியூயார்க் விமான நிலையத்தில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் சிறைவைப்பா?

omar-abdullahஅமெரிக்காவுக்கு செல்லும் விவிஐபிகளுக்கு அவ்வப்போது அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அறிவிக்கப்படாத சிறை வைப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதல் ஷாருக்கான் வரை பலர் இந்த அனுபவத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா நியூயார்க் விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுமார் 2 மணி நேரம் தனியறையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை ஒமர் அப்துல்லா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் நியூயார்க் விமான நிலையத்தில் 2ஆம் கட்ட பாதுகாப்பு சோதனைக்காக தன்னை நிறுத்தி வைத்ததாகவும், இதுபோன்ற நிகழ்வு அமெரிக்காவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் தனக்கு நேர்வதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேசிய மாநாடு ஒன்றில் பங்கேற்க அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

I just spent TWO hours in a holding area & this happens EVERY time. Unlike I don’t even catch Pokemon to pass the time.

Leave a Reply