குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக டிரெக்கிங் சென்ற மாணவிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் சிக்கியதில் ஏற்கனவே 12 பேர் பலியான நிலையில் நேற்று சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த அணுவித்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி ஒருசில மணி நேர இடைவெளியில் பரிதாபமாக மரணமடைந்தனர்

மேலும் இன்னும் ஒருசிலர் 70% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் ஒருசிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது

forest fire death increased as 14

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *