shadow

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 121 இந்தியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலையும், அவர்களுடைய சொத்து மதிப்பையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடீஸ்வரர்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பட்டியலில் 121 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் பேடிஎம் நிறுவனர் விவேக்சேகர் ஷர்மா என்பவர் இந்தியாவின் இளம் கோடீஸ்வரராகவும், 92 வயது சாம்பிரதா சிங் என்பவர் இந்தியாவின் வயதான கோடீஸ்வரராகவும் உள்ளனர்.

இந்த பட்டியலில் அமெரிக்கர்கள் 585 பேர்களும், சீனர்கள் 373 பேர்களும் இடம் பெற்று உள்ளனர். இந்த பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி 19-வது இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 72.84 சதவீதம் உயர்ந்து 40.1 பில்லியன் அமெரிக்க டாலராக (2,60,622 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் அம்பானி 33-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

உலக அளவில் 8 இந்திய பெண்கள் கோடீசுவரர்களாக உள்ளனர். உலக அளவில் 256 பெண்கள் கோடீசுவர்ரகளாக உள்ளனர். சாவித்திரி ஜிண்டால், ஜிரண் மசூம்தார் உள்பட 6 இந்திய பெண்கள் போர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர்.

Leave a Reply