shadow

those-who-have-the-habit-of-chewing-gum-headache-350x250

குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை சூயிங்கம் மெல்லுவது என்பது பொதுவான வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் 10 – 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் சூயிங்கம்மை அதிகமாக மெல்லுகிறார்கள். இதனால் என்ன கேடு விலையைப் போகிறது என்று கேட்கிறீர்களா?

ஒன்றல்ல, இரண்டல்ல நிறைய வகையில் சூயிங்கம்மை மெல்லுவதால் கேடு விளைகிறது. பல் சொத்தை, கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சி, தலை மற்றும் காதுவலி, உடல்பருமன், தாடையில் பாதிப்பு, வளர்சிதை மாற்றம் என நிறைய பாதிப்புகள் சூயிங்கம் மெல்லுவதால் ஏற்படுகின்றன.

பற்களில் ஏற்படும் பாதிப்புகள் சூயிங்கம்மில் இருக்கும் செயற்கை சர்க்கரை பற்களில் சொத்தை ஏற்பட காரணியாக இருக்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் அமிலத்தன்மை உள்ள ஃப்ளவர் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயனம் போன்றவை பற்களை பாதிப்படைய வைக்கிறது.

தலைவலி நீங்களே கூட இதை பல தடவை உணர்ந்திருக்கலாம். தொடர்ந்து சூயிங்கம் உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைவலி பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். இது தாடை பகுதியில் அதிகமாக அழுத்தம் ஏற்படுத்துகிறது இதனால் தான் தலைவலி ஏற்படுகிறது.

வாயுத்தொல்லை சூயிங்கம் மெல்லும் போது அதிகளவில் உங்களுக்கு தெரியாமலேயே காற்று உடலுக்குள் செல்கிறது. இதனால் IBS எனப்படும் எரிச்சல் கொண்ட குடல் நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் குமட்டல், வாயுத்தொல்லை போன்றவை ஏற்பட இதுவும் கூட ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது.

தாடை பாதிப்பு அதிகளவில் சூயிங்கம் மெல்லுவதால் தாடை தான் அதிகமாக பாதிப்படைகிறது. நாள்பட இது தாடை எலும்புகளில் தேய்மானம் ஏற்படவும் காரணமாகிறது. இதனால் காதுவலி, தலைவலி ஏற்படும் அபாயம் இருக்கிறது.

உடல் பருமன் அதிகமாக சூயிங்கம் மெல்லுவதால், உடலில் பசி அதிகரிக்க செய்கிறது இதனால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சிதை மாற்றம் அதிக நேரம் சூயிங்கம் மெல்லுவதால், வாயில் எச்சில் அதிகமாக சுரக்கிறது. இது வளர்ச்சிதை மாற்றங்களை குறைக்கிறது. இது உடலுக்கு மிகவும் தீங்கானது.

கருவை பாதிக்கிறது கருத்தரித்த பெண்கள் அதிகம் சூயிங்கம் மெல்லுவதால் கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறதாம். எனவே, கருத்தரித்து உள்ள பெண்கள் சூயிங்கம் மெல்லுவதை தவிர்க்கவும்.

Leave a Reply