shadow

man-on-diet-350x250

நீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா?? அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வாலிப வயது மட்டும் தான் கல்லையும் கரைக்கும். வயதாக வயதாக, பஞ்சை kகரைக்க கூட சிரமப்படும் நமது உடலியக்கம்.

அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்.

உதாரணமாக, வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு.

எனவே, நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பீன்ஸ் தினமும் கால் கப் பீன்ஸ் உங்கள் உணவில் சேர்த்து நீங்கள் சாப்பிட்டு வந்தால், இதயத்திற்கு கேடு விளைவிக்கும் தீயக் கொழுப்பான எல்.டி.எல் கொழுப்பானது 5% வரை குறையும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

ஓட்ஸ் ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவு. இதயத்திற்கு வலு சேர்க்கும். 45 – 55 வயதில் ஆண், பெண் இருவருக்கும் இதய பாதிப்புகள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, நீங்கள் ஓட்ஸ் உட்கொள்வதால் அந்த பாதிப்பை தவிர்க்கலாம். இது கொழுப்பை குறைக்கவும் பெருமளவு உதவும். பீன்ஸை போலவே, ஓட்ஸ் உணவும் எல்.டி.எல் கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் தடுக்கிறது.

ஆப்பிள் தினமொரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை பார்க்க தேவையில்லை என்பார்கள். ஓர் பெரிய ஆப்பிள் இதய நலனை மேம்படுத்துகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழவு நோய் மிகவும் குறைவாக தான் ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

நட்ஸ் சிப்ஸ், பிஸ்கட்டுகள் சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் தினமும் நட்ஸ் உணவை உட்கொள்ளலாம். ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் நட்ஸ் உணவை தினமும் சாப்பிட்டு வந்தால், 40 வயதிற்கு மேல் ஏற்படும் மாரடைப்பு, ஸ்ட்ரோக், இதய நோய்களில் இருந்து 28% வரை பின்தங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பச்சை உணவுகள் கீரை, காய்கறிகள் போன்ற பச்சை உணவுகள், முக்கியமாக பசலைக்கீரை உங்கள் மதிய உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமான இயக்கம் நன்றாக நடக்கவும், இரத்தம் சுத்தமாக இருக்கவும் உதவுகிறது.

பெர்ரி ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி உணவுகள் மூளை நன்கு இயங்க உதவுகிறது. மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பெருமளவு உதவுகிறது பெர்ரி.

தயிர் தயிரில் உள்ள கால்சியம் மற்றும் நல்ல பாக்டீரியா உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. தயிரில் இருக்கும் உயர்ரக புரதம் 40 வயதை கடக்கும் ஒவ்வொருவரின் உடலுக்கும் மிகவும் தேவையான உணவு.

Leave a Reply