11ஆம்னி பஸ் நிறுவனங்கள் பயணிகளை கவர்ச்சி திட்டங்கள் மூலம் இழுக்க புதுப்புது யோசனைகளை சிந்தித்து வருகிறது. அந்த வரிசையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரவு உணவு வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் அளித்த பேட்டியில் ”ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரமான உணவு பயணத்தின் இடையே கிடைப்பதில்லை. ஏதாவது ஒரு மோசமான ஓட்டலில் பேருந்து நிறுத்தப்படுவதால் வேறு வழியின்றி பயணிகள் அந்த உணவை சாப்பிட்டு வருகின்றனர். இது பயணிகளின் ஆரோக்கியத்தையும் கெடுத்து வருகிறது.

இதற்காக ஆம்னி பஸ் நிறுவனங்கள் சார்பில், பயணிகளுக்கு இரவு உணவு வழங்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.  இதற்காக சென்னையில் உள்ள பிரபல சைவ மற்றும் அசைவ ஓட்டல் உரிமையாளர்களிடமும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

பயணிகள் தங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதே அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை எங்களிடம் தெரிவித்துவிட்டால் அந்த உணவை நாங்கள் ஏற்பாடு செய்து அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்து வாங்கிக்கொள்ள இருக்கின்றோம்.  ஆன்லைனிலும், நேரிலும் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்யலாம்.

இந்த திட்டம் இன்னும், ஒருசில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும். முதல் கட்டமாக சென்னை கோயம்பெடு பஸ் நிலையம் மற்றும் பெருங்களத்தூர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க ஆலோசித்துள்ளோம்.

இவ்வாறு மாறன் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *