shadow

2015-ல் கூகுளில் அதிக தேடப்பட்டவர்கள். மோடியை முந்தினார் சன்னிலியோன்
google
கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பிரமாண்ட திரைப்படமான ‘பாகுபலி’ முதலிடத்தை பெற்றுள்ளது. இதுவரை பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே முதலிடத்தை கைப்பற்றி வந்த நிலையில் தற்போது தென்னிந்திய திரைப்படம் ஒன்று இந்திய அளவில் கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூகுளில் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களில் விஜய்யின் ‘புலி’, ஷங்கரின் ‘ஐ’ மற்றும் மகேஷ்பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’ ஆகிய திரரப்படங்களும் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தேடலில் முதல் பத்து இடங்களை பிடித்த இந்திய திரைப்படங்களின் பட்டியல் வருமாறு:

பாகுபலி
பாஜ்ராங்கி பாஜியான்
பிரேம் ரத்தான் தா
ஏபிசிடி

பிகே
புலி
ராய்
ஹமாரி ஆதுரி
ஸ்ரீமந்துடு

இதேபோல் இந்திய அளவில் அனைத்து துறை கூகுள் தேடலிலும் ‘பாகுபலி’ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியும், 5வது இடத்தை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியும், 6வது இடத்தை அப்துல்கலாமும், இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவ்வருடம் அதிகம் தேடப்பட்ட இந்திய நபர்களில் சன்னிலியோன் முதலிடத்தை பிடித்துள்ளார். இவரை அடுத்து சல்மான்கான், அப்துல்கலாம், காத்ரீனா கைப், தீபிகா படுகோனே, ஷாருக்கான், யோயோ ஹனிசிங், காஜல் அகர்வால், அலியா பட மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply