shadow

Flipkart-and-Myntraஇணையதள வர்த்தகத்தில் பெரும் சாதனை படைத்து வரும் பிலிப்கார்ட் நிறுவனம், தனது போட்டி நிறுவனமான மைண்ட்ரோ நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது. மைண்ட்ரோ நிறுவனத்தை பிலிப்கார்ட் ரூ.1740 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மைண்ட்ரோ நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் பிளிப்கார்ட் வாங்கியுள்ளதால், அந்நிறுவனத்தை முற்றிலும் பிளிப்கார்ட் கைப்பற்றியுள்ளது.

தனது போட்டி நிறுவனங்களுள் ஒன்றை கைப்பற்றிவிட்டதால் பிளிப்கார்ட் இணையதள வர்த்தக சந்தையில் பெரும் புரட்சியை செய்திருக்கிறது. மேலும் தனது மற்ற போட்டி நிறுவனங்களான அமேஆன் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனங்களுக்கு இனி கடுமையான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது.

மைண்ட்ரோ நிறுவனத்தை பிளிப்கார்ட் கைப்பற்றியபோதிலும், மைண்ட்ரோ நிறுவன நிர்வாகி முகேஷ் பன்சால் அவர்களை அதே பதவியில் தொடர்ந்து நீடிக்க பிளிப்கார்ட் நிர்வாகம் அனுமதித்துள்ளது.

கூடியவிரைவில் மைண்ட்ரோ நிறுவனத்தில் ரூ.600 கோடி கூடுதல் முதலீட்டை செய்ய உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஆன்லைனில் முதன்முதலில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட பிளிப்கார்ட், பின்னர் படிப்படியாக எலக்ட்ரானிக், பேஷன் மற்றும் வீட்டு உபயோக பொருட்களையும் விற்பனை செய்து சாதனை படைத்தது. மாதம் சுமார் 50 லட்சம் பொருட்களை பிளிப்கார்ட் விற்பனை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply