shadow

நடுவானில் திடீரென இரண்டாக பிளந்த விமான எஞ்சின். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

8அமெரிக்காவை சேர்ந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்த்தின் போயிங் விமானம் கடந்த சனிக்கிழமை காலை நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து புளோரிடாவின் ஆர்லாண்டோ நகரத்துக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 99 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் பயணம் செய்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட ஒருசில நிமிடங்களில் விமானத்தின் எஞ்சினில் ஏதோ சத்தம் கேட்டதை கண்டறிந்த விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக திசைதிருப்பி, புளோரிடா மாநிலம் பென்ஸகோலா நகர விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார்.

தரையிறங்கிய பின்னர்தான் விமானத்தின் இரண்டு என்ஜின்களில் ஒரு என்ஜின் இரண்டாக உடைந்திருந்தது தெரிய வந்தது. தகுந்த நேரத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply