கொலம்பியா விமானம் விபத்து. பிரேசில் கால்பந்து அணி வீரர்கள் கூண்டோடு பலியா?

brazil-flightபிரேசில் நாட்டு கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் போலியாவிலிருந்து கொலம்பியாவின் மெடல்லின் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் விழுந்து நொறுங்கியதாகவும், இதில் பயணம் செய்த பிரேசில் நாட்டு சாப்பகோயன்சி கால்பந்து அணி வீரர்கள் உள்பட 81 பேர்களின் கதி என்ன? என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை என்றும் பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போதிய எரிபொருள் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. பிரேசில் நாட்டு சாப்பகோயன்சி கால்பந்து அணி வீரர்கள் நாளை நடைபெறவுள்ள கோபா சுடமெரிக்கா கால்பந்து இறுதி போட்டியில் அட்லெடிகோ நசியோனல் அணிக்கு எதிராக விளையாடுவதற்காக இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்களின் கதி இன்னும் தெரியாதால் கால்பந்து அணி வீரர்கள் கூண்டோடு பலியா? என்ற அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள் உள்ளனர்.

Related Posts