shadow

newyork

மலேசியா விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மாயமாய் மறைந்ததில் இருந்து அந்த விமானத்தை தேடும் பணியில் உலகம் முழுவதும் உள்ள மீட்புப்படைகள் தீவிர முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் நியூயார்க் பார் ஒன்றில் மலேசிய விமானத்தின் பெயரில் ஒரு மெனு உருவாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். மதுபான வகை ஒன்றிற்கு Flight MH370 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள Mother’s Ruin bar என்ற மதுபான பாரில் [Flight 370] என்ற புதிய வகை மெனுவை கடந்த வாரம் முதல் இணைத்துள்ளனர். இந்த மதுபானம் $13 விலையுள்ளது. இதில் மதுபானமான ஜின்,லெமன் மற்றும் கிரேப் கலந்து இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு TJ Lynch and Richard Knapp என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மதுபார், நியூயார்க் நகரில் மிகவும் புகழ்பெற்றது. இந்த புதியவகை மெனுவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இதன் உரிமையாளர் இந்த மெனுவை நீக்கும்படி நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த மெனுபார் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும், 239 உயிர்கள் என்ன ஆயிற்று என்று மலேசியா மட்டுமின்றி உலகம் முழ்வதும் பெரும் கவலையில் இருக்கும் நேரத்தில் மதுபானத்தில் விமானத்தின் பெயரை வைத்து மலிவான விளம்பரத்தில் ஈடுபட வேண்டாம் என மலேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்கி இந்த மெனு நீக்கப்பட்டதாக்வும் அவர் கூறினார்.

Leave a Reply