shadow

கட்சியின் பெயர், கொடி தயார்: இமயமலையில் இருந்து வந்ததும் ரஜினி அறிவிக்கின்றார்

09ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர் மற்றும் கொடி தயாராக இருப்பதாகவும், இமயமலையில் இருந்து ரஜினி திரும்பியதும் அவரது அனுமதி பெற்று கட்சியின் பெயர் மற்றும் கொடி உறுதி செய்யப்படும் என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். இதனையடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாவட்டந்தோறும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி கட்சியின் கொடியும், பெயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் பெயருக்காக சுமார் 10 பெயர்கள் பட்டியலில் இருப்பதாகவும், மக்களை கவரும் விதத்தில்ல், அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை தரும் வகையில் பெயர் தேர்வு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply