shadow

LPG சிலிண்டர்கள் பெற சென்னையில் 5 சிறப்பு முகாம்கள். இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

lpgவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இண்டேன் நிறுவன வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டர்களை பெறும் வகையில், சென்னை மற்றும் புறநகரில் 5 இடங்களில், சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களும் காலி சிலிண்டர்களை அளித்து, புதிய சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம், இன்றும் நாளையும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள்:

● பட்டம்மாள் கேஸ் ஏஜென்ஸி: மேற்கு தாம்பரம், முடிச்சூர் சிவன் கோயில் அருகில்.

● ஸ்ரீ செல்லா கேஸ் ஏஜென்ஸி – கிழக்கு தாம்பரம், சேலையூர் காவல் நிலையம் எதிரில்.

● ஸ்ரீ அபிராம் இண்டேன்: சோழிங்கநல்லூர், ஆவின் பூத் அருகில்.

● சுபம் கேஸ் ஏஜென்ஸி: மணலி நியூ டவுண், ஸ்டேட் வங்கி எதிர்புறம்.

● பிரசன்னா கேஸ்: வடக்கு கொரட்டூர், ஆர்சிட் ஸ்பிரிங் அபார்ட்மெண்ட் அருகில்

English Summary: Five special camps to receive Indane LPG cylinders

Leave a Reply