இலங்கையில் பாலியல் தொழில் செய்த 5 ரஷ்ய பெண்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள வெள்ளவத்தை என்ற பகுதியில் சொகுசு வீடு ஒன்றில் ரஷியாவை சேர்ந்த இளம் பெண்கள் சிலர் தங்கி இருந்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி வெளியாட்கள் வந்து போனதை பார்த்த போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இன்று போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ரஷ்ய பெண்கள் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

சுற்றுலா விசாவில் இலங்கை வரும் ரஷிய பெண்கள் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது சுற்றுலா விசா காலம் முடிந்ததும் சொந்த நாட்டுக்கு விமானத்தில் சென்று விடுவார்கள். அதன் பிறகு மற்றொரு குழு இதே போல் சுற்றுலா விசாவில் வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி பாலியல் தொழிலை தொடர்வதாக தெரிகிறது

ரஷ்ய பெண்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ 75 ஆயிரம் வரை பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதாகவும், தினமும் 3 வாடிக்கையாளர்கள் என்ற விகிதத்தில் அவர்கள் தங்கள் தொழிலை செய்து கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மொத்தம் 5 ரஷிய இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு உதவியதாக முக்கிய பிரமுகர் ஒருவரையும் கொழும்பில் போலீசார் கைது செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பினர் தெரிவித்தனர்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *