shadow

அமெரிக்க எம்பிக்கள் ஆகும் ஐந்து இந்தியர்கள்

1அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன் பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளதால் எம்பி பதவிக்கு போட்டியிடுபவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்ற எம்பி பதவிக்கு 5 இந்தியர்கள் போட்டியிடுகின்ற்னர். அவர்களுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் ஐந்து இந்தியர்கள் நுழைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகி’றது

ஜனநாயகக் கட்சி சார்பில் கலிஃபோர்னியா மாகாணத்தில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், அமி பேரா, சான்பிரான்சிஸ்கோ பகுதி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ரோ கன்னா, இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் போட்டியிடும் ராஜா கிருஷ்ணமூர்த்தி, வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் தொகுதியில் ஜனநாயக கட்சி வேட்பாளரான பிரமீளா ஜெயபால் ஆகிய இந்தியர்கள் அமெரிக்க பாராளுமன்றத்தின் எம்பிக்கள் ஆவார்கள் என்று கூறப்படுகிறது

அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினர் குறிப்பிடத்தக்க இடம் பிடித்துள்ளது இந்தியாவில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு பெருமையே

Leave a Reply