ஐந்து முன்னணி நாயகிகளுடன் பார்த்திபனின் அடுத்த படம்
parthiban
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் வெற்றி அடைந்தபோதிலும் இயக்குனர் பார்த்திபன் அடுத்த படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டாமல் நடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். குறிப்பாக ‘நானும் ரவுடிதான்’ படத்தில் அவருடைய வில்லத்தனமான நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து ஒருசில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளதாகவும், சேரனின் ‘ஆட்டோகிராப்’ டைப்பில் ஹீரோ சந்தித்த ஐந்து பெண்கள் குறித்த கதைதான் பார்த்திபனின் அடுத்த படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஐந்து முன்னணி நாயகிகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் அவர்கள் யார் யார் என்பதை அறிவிக்கவுள்ளதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் தனது வழக்கமான காமெடி சென்ஸ் உள்ள படமாக இல்லாமல் ‘அழகி’ படம் போன்று சீரியஸ் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *