தேவையான பொருட்கள்:

மீன் – 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய இஞ்சி&பூண்டு – 1 கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
முட்டை – 1
ப்ரெட் க்ரம்ப்ஸ் – 3/4 கப்
கறிவேப்பிலை – 2
உருளை கிழங்கு வேக வைத்து மசித்தது – 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – 1/4 கப் பொடியாக நறுக்கியது
எண்ணை பொரிக்க – 1/2 கப்

செய்முறை:

செய்முறை மீன் துண்டுகளில் மஞ்சள், மிள்காய்த் தூள், உப்பு தேவைக்கு சேர்த்து பாதி வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும். பிறகு எண்ணை 2 கரண்டி காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி மற்றும் பூண்டு நறுக்கியது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும். பிறகு பொரித்து சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீனை சேர்த்து மேலும் வதக்க வேண்டும்.

கொத்தமல்லி இலை சேர்த்து, மசித்த உருளைக் கிழங்கும் சேர்த்து கலக்கி கைய்யில் வடை போல் தட்ட வேண்டும். முட்டையை கட்டியில்லாமல் மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். ப்ரெட் க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்க வேண்டும். பின்பு தட்டிய மீன் வடைகளை முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பொதிந்து எடுக்க வேண்டும். இப்படி எல்லா வடைகளையும் பிரட்டி எடுத்து ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்தால் ப்ரெட் க்ரம்ஸ் வடைகளோடு நன்கு ஒட்டியிருக்கும். பின் எண்ணை 1/4 கப் காயவைத்து நான் ஸ்டிக் பானில் ஆறோ அல்லது அதற்கும் மேற்பட்ட வடைகளையோ இட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாற வேண்டும்.

Leave a Reply