shadow

அஜித் செய்ததை 11 வருடங்கள் கழித்து செய்யும் விஜய்

கோலிவுட் திரையுலகில் அஜித், விஜய் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களில் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். இரு நடிகர்களும் கோலிவுட்டில் இரு துருவங்களாக தொழில் அளவில் இருந்தாலும் இருவரும் சிறந்த நண்பர்களாக தனிப்பட்ட முறையில் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘விஜய் 61’ படத்தில் முதல்முறையாக 3 வேடங்கள் ஏற்று நடிக்கின்றார். மூன்று வித்தியாசமான கேரக்டர்களுக்கு காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் ஜோடிகளாக நடிக்கவுள்ளனர். அட்லி இயக்கி வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் முதல்முறையாக இப்போதுதான் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில், அஜித் கடந்த 2006ஆம் ஆண்டே ‘வரலாறு’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply