shadow

அரவிந்தசாமியுடன் முதன்முதலாக ஜோடி சேரும் த்ரிஷா

sadhuranga-vettaiகடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் மனோபாலா தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்த “சதுரங்கவேட்டை” நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

முதல்பாகம் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை பற்றி விவரித்த நிலையில் இரண்டாம் பாகம் மெருகேறியவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்,.

சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுத, ‘சலீம்’ படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

முதன்முதலாகஅரவிந்த்சாமி-திரிஷா ஜோடி சேரும் இந்த படத்தில் நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Leave a Reply