shadow

pinkகிரிக்கெட் விளையாட்டில் 20-20 போட்டிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதால் டெஸ்ட் போட்டிகள் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க ஐ.சி.சி. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியில் ஒரு புதிய முயற்சியாக  ரோஜா நிறத்திலான  கிரிக்கெட் பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

பகலிரவு போட்டியில் விளக்குகளின் வெளிச்சத்தில் ரோஜா நிறத்தின் பந்து தெளிவாக தெரியும் என்பதால் இந்த ரக பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.அதுபோல் மங்கலான வெளிச்சத்திலும் இந்த ரக பந்துகளை எளிதாக காண முடியும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான’ கோகாபுரா ஸ்போர்ட்’  ரோஜா வண்ணத்தில் பந்துகளை தயாரித்துள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது இந்த பந்துகளை டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்ததலாம் என்று அது தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் ‘பிங்க்’ வர்ணத்திலான பந்து சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது.

Leave a Reply