shadow

விஜய் 25 வருடத்திற்கு முன் செய்ததை முதன்முதலாக செய்யும் அஜித்

கடந்த 25 வருடங்களாக திரையுலகில் அஜித், விஜய் இருவரும் மாஸ் காட்டி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஒரு பாடலை பாடும் வழக்கத்தை கொண்டுள்ளார். ஆனால் அஜித் இதுவரை ஒரு படத்தில் கூட பாட முயற்சித்ததில்லை

இந்த நிலையில் முதல்முறையாக சிவா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தில் அஜித் ஒரு பாடலை பாடவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், அஜித்திடம் பாடுவதற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் முதன்முறையாக பாடும் பாடல் எப்படி இருக்கும் என்பதை வரும் தீபாவளி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply