shadow

சென்னை தி.நகரில் திடீர் தீ விபத்து: பெரும் பரபரப்பு

சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் கடந்த சில மணி நேரமாக போராடி வருகின்றனர்.

தற்போது தீ கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டுள்ள தனியார் நிறுவன அலுவலகம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *