தாமாக முன்வந்து கருப்புபணம் குறித்த தகவல் தருவோரின் ரகசியம் பாதுகாக்கப்படும்; மத்திய அரசு உறுதி
black money
சுவிஸ் வங்கிகள் உள்பட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள தங்களது கருப்புப் பணம் குறித்த தகவல்களை தாமாக முன்வந்து அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளதால் பெருவாரியான கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தங்கள் தகவலை தர முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் விவரங்கள் குறித்த ரகசியம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறதோ, அதேபோல், தங்களது கருப்புப் பணம் குறித்த தகவல்களை தாமாக முன்வந்து அளிப்பவர்களின் விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள தங்களது வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள், குறிப்பிட்ட வங்கியில் எவ்வளவு தொகையை “டெபாசிட்’ செய்துள்ளோம் என்பதை தாங்களாகவே மதிப்பீடு செய்து தெரிவிக்கலாம். இருப்பினும், இந்த விவரத்தை அளிக்கும்போது, தங்களது வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் சான்றிதழை இணைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *