shadow

மார்ச் 11-ல் மதகஜ ராஜா ரிலீஸ்
Madha-Gaja-Raja-Movie-Latest-Stills-Photos-01
சுந்த சி இயக்கிய அரண்மனை 2′ சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனத்தை பெற்று சுமாராக ஓடிய நிலையில் அவர் இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா’ திரைப்படம் பல கடந்த சில வருடங்களாக பொருளாதார சிக்கல் காரணமாக பெட்டிக்குள் முடங்கியுள்ளது. இந்த படம் வெளிவர வாய்ப்பே என்று கருதப்பட்ட நிலையில் விஷாலின் தீவிர முயற்சியால் தற்போது இந்த படத்திற்கு விடிவுகாலம் பிறந்தது.

‘மதகஜராஜா வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்

விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், நிதின் சத்யா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஏற்கனவே பல மாதங்களாக ரிலீஸாகாமல் முடங்கியிருந்த பூலோகம் மற்றும் ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் ‘மதகஜராஜா’வும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply