shadow

 பிபா கால்பந்து தரவரிசை: பெல்ஜியத்தை பின்னுக்கு தள்ளிய அர்ஜெண்டினா

பிபா கால்பந்து தரவரிசையில் கடந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்த பெல்ஜியத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு அர்ஜென்டினா இந்த ஆண்டு முதல் இடத்தை பெற்றுள்ளது. மேலும் பிரேசில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது.

முதல் இடத்தை பிடித்துள்ள அர்ஜென்டினா 2016ஆம் ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றியும் மூன்றில் தோல்வியும், இரண்டில் டிராவும் செய்துள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே  பெல்ஜியத்திடம் இருந்து முதல் இடத்தை பறித்துக் கொண்ட அர்ஜென்டினா, தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்து வருகிறது.

கடந்த ஆண்டு முதல் இடத்தைப் பிடித்த பெல்ஜியம் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி 3-வது இடத்திலும், பெல்ஜியம் 4-வது இடத்திலும், சிலி ஐந்தாவது இடத்திலும், கொலம்பியா 6-வது இடத்திலும், பிரான்ஸ் 7-வது இடத்திலும், போர்ச்சுக்கல் 8-வது இடத்திலும், உருகுவே 9-வது இடத்திலும், ஸ்பெயின் 10-வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply