shadow

tirumalaதிருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக சுகாதாரமான உணவு வழங்கி வருகிறது. இருப்பினும் திருமலையில் ஏராளமான சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் திருமலையில் இயங்கி வரும் தனியார் உணவகங்களில் இந்து சம்பிரதாய முறைப்படி உணவுகள் விற்பனை செய்யவேண்டும் என்றும், விரைவில் இந்து சம்பிரதாயத்திற்கு முரணான பாஸ்ட் புட் வகைகள் தடை செய்யப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருமலை தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு காரணமாக அங்கு இயங்கி வரும் சிறிய, பெரிய உணவகங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் திருமலையில் உணவு விற்பனை செய்தால் அந்த உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேவஸ்தான் அறிவிப்பும் ஓட்டல் உரிமையாளர்களை கலங்க வைத்துள்ளது.

Leave a Reply